தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - ஒன்றிய அரசு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - ஒன்றிய அரசு பாராட்டு

புதுடில்லி, நவ 21- ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார் பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்றது. ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை செயல் படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட் டன.

 அப்போது பேசிய ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியதாவது: தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப் படுகிறது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் அய். எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.

ஒன்றிய உணவு மற் றும் பொது விநியோக துறையின் திட்டங்களை மாநிலங்கள் முழுமை யாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்படும். 2023-2024 ஆம் ஆண்டிற் குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறி வூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்கு வதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள் ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறி வூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய மாநிலங்கள் முழு மையாக தயாராக இருக்க வேண்டும். நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத் தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழி களை மாநிலங்கள் ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே  ரேசன் கார்டு திட் டத்தின் கீழ் புலம்பெயர்ந் தோருக்கு உணவு தானி யங்களை உறுதி செய்வ தில் மாநிலங்கள் எடுத் துள்ள முயற்சிகள் பாராட் டத்தக்கது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 91 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment