ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மோடி ஆட்சியின் மார்ச் 2022 இல் முடிவடைந்த 5 ஆண்டுகளில், ரூ.10 லட்சம் கோடி வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் தள்ளுபடி செய்ததில் இருந்து ரூ.1.32 லட்சம் கோடி மட்டுமே திரும்பப் பெற்றுள்ளன.

வன உரிமைகள், நில உரிமைகள், பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்தி வருகிறது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு, டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கும் சட்டசபையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தொடரில், எஸ்டி/எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு “மக்கள் தொகை விகிதத்தில்” கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்ற திட்டமிட்டுள்ளது. இது நிறைவேற்றப் பட்டால் இட ஒதுக்கீடு 81 சதவீதமாக மாறும்.

தி டெலிகிராப்:

சமீபத்திய சாவர்க்கர் சர்ச்சையில் காங்கிரஸ் தனது கருத்தை பின்வாங்காது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும் தங்களது தலைவர்களைப் பற்றி பொய் சொல்வதை நிறுத்தும் நாளில், அவர்களின் தலைவர்கள் பற்றி உண்மையைப் பேசுவதை நிறுத்துவோம் என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment