சு.சாமி - இன்னொரு ஹரேன் பாண்டியாவா? சு.சாமியின் திடுக்கிடும் தகவல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

சு.சாமி - இன்னொரு ஹரேன் பாண்டியாவா? சு.சாமியின் திடுக்கிடும் தகவல்கள்

புதுடில்லி, நவ.6 பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணி யன்சாமி வெளியிட்டுள்ள ஒரு ட்விட் டர்' பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஹரேன் பாண்டியா போல என்மீது திட்டமிடவில்லை என்று நான் நம்பு கிறேன். அது உண்மை என்றால், என் னுடைய நண்பர்களுக்கு நான் எச் சரிக்கை விடுக்க வேண்டும். எனக்கு என்ன கிடைக்கிறதோ அதைத் திருப் பித் தருவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இருவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத்தில் இருப்ப வர்களைக் கூட அவமானப்படுத்தி யுள்ளனர்."

இவ்வாறு சுப்ரமணியன்சாமி வெளி யிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி யுள்ளது.

சுப்ரமணியன் சாமி குறிப்பிட்ட “ஹரேன் பாண்டியா என்பவர் யார்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இளம் வயதிலேயே சேர்ந்து பணியாற்றி, பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக ஆனவர். குஜராத்தில் மோடி - அமித் ஷாவுக்கு எதிர் கோஷ்டியாக கருதப் பட்டவர். இவர் 2003 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அவர் கொலைளபட்டபோது - அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி அவருக்குப் போதிய பாதுகாப்புத் தராததால் அந்தத் திட்டமிடப்பட்ட கொலை நடந்தேறியதாக ஹரேன் பாண்டியா மனைவியாலும், பா.ஜ.க. அரசியல் வட்டாரத்திலும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக 15 பேர் மீது சி.பி.அய். குற் றம் சாட்டியது. விசாரணை நீதிமன்றம் அவர்களில் 12 பேரைத் தண்டித்தது. ஆனால், குஜராத் உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று அனைவரையும் விடு வித்துவிட்டது.

ஹரேன் பாண்டியாவின் தந்தை வித்தல் பாண்டியாவும் அவர் சாகும் வரை தனது மகன் சாவுக்கு மோடி மீது குற்றம் சாட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் சுப்ரமணியன்சாமி தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி யும் - அமித்ஷாவும் ஹரேன் பாண்டியா போல என்மீது திட்டமிட வில்லை என நம்புகிறேன் என்று சூசகமாகத் தகவல் தந்திருப்பது பலரையும் திடுக்கிட வைத் துள்ளது.

இந்த பரபரப்பான பதிவு வந்து இரண்டு, மூன்று நாட்களாகியும் பிரதமர் மோடி தரப்பிலிருந்தோ உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமிருந்தோ எந்த வித மறுதலிப்போ, நடவடிக் கையோ இல்லாததும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இந்த விவகாரத்தைத் தோண்டத் தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment