ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சஞ்சய் ராவத் கைது நடவடிக்கை,  அமலாக்கத் துறையின் அதிகார அத்துமீறலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்கிறது தலையங்க செய்தி.

* மகாராட்டிராவில் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே ராகுல் காந்தியின் நடை பயணத்தில் கலந்து கொண்டார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 10 சதவீத உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு சட்டத் தீர்ப்பு குறித்து விவாதிக்க நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிமுக பங் கேற்காது.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜார்க்கண்ட் சட்டமன்றம், ஒரு சிறப்பு அமர்வில், இரண்டு மசோதாக்களுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது, ஒன்று மாநிலத்தில் காலியாக உள்ள அரசுப் பதவிகள் மற்றும் சேவைகளில் இடஒதுக்கீட்டை 77% ஆக உயர்த்தியது, மற்றும் இரண்டாவது, 1932 இல் நிலப் பதி வேடுகளைப் பயன்படுத்தி மக்களில் உள்ளூர்வாசிகள் என்ற வரையறைக்கு யார் பொருந்துகிறார்கள் என குடி யுரிமை நிலையைத் தீர்மானிக்கிறது.

தி இந்து:

* அரசமைப்பின் 103ஆவது திருத்தத்தை உறுதிப் படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தற்போது உள்ள உறுதியான நடவடிக்கையின் தர்க்கத்தை ரத்து செய்ய முயல்கிறது என்கிறார் கட்டுரையாளர் சங்கர் சக்கரவர்த்தி.

* தொழிலாளர் அமைச்சகம், இ.எஸ்.அய்.சி. அதிகாரி களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்க ஜக்கியின் வாழும் கலை அமைப்பை ஈடுபடுத் துவதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு.பொதுப் பணத்தை இந்தப் பயிற்சிக்கு பயன்படுத்தியதற்கு கண்டனம்.

தி டெலிகிராப்:

* உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக சமூகப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50 சதவீதத்துக்கு கீழேயே நிறுத்தப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் 50 சதவீத உச்ச வரம்பு, உயர்ஜாதி அரிய வகை ஏழை பிரிவி னருக்கு பொருந்தாது,  சமூகப் பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறுகிறது, இது குறித்து அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்” என 

கோ.கருணாநிதி அரசுக்கு கேள்வி.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment