செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

செய்திச் சுருக்கம்

அறிவிப்பு

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு 6 மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என இக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தகவல்.

நெற்பயிர்

டெல்டா மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் 23 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமானது. கடல் சீற்றத்துடன் இருந்ததால் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

அழைப்பு

தாட்கோ மூலம் ஆவின் பாலகம் அமைக்க ஆதி திராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரவு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களில் எத்தனை பேர், ஒன்றிய அரசின் சிறப்புச் சலுகையை பயன்படுத்தி பிற நாடுகளில் படிப்பை தொடர்கின்றனர் என அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு.

முடிக்க

‘நீட்' முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான 2ஆவது சுற்று கலந்தாய்வை வரும் 16ஆம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

குளிர்கால...

நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தி«யே நடைபெற வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல்.

செல்லும்

கூட்டணியை மாற்றினாலும் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

மக்கள் தொகை

உலக மக்கள் தொகை வரும் 15ஆம் தேதியுடன் 800 கோடியை தொடும் என அய்க்கிய நாடுகள் சபை அறிவிப்பு


No comments:

Post a Comment