செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

செய்திச் சுருக்கம்

பயிர்க்கடன்

கூட்டுறவு சங்க வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேம்பாலம்

சென்னை திருத்தணி - ரேணிகுண்டா சாலையில் அமைய உள்ள 6 வழி ரயில்வே மேம்பால பணிக்கு ரயில்வே துறையுடன் இணைந்து ஒப்பந்தம் கோரப் படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விதைத் தொகுப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் விதைத் தொகுப்பு மற்றும் புல் கறணைகள் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம், மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

432 ஏரிகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கி வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் மழை பெய்து வரும் நிலையிலும் தமிழ்நாட்டில் உள்ள 432 ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வரண்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தகவல்.

வழக்குரைஞர்கள்

பிற மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு தமிழ்நாட்டில் தொழில் செய்யும் வழக்குரைஞர்கள் எத்தனை பேர்? என பட்டியல் தர பார் கவுன்சில் உத்தரவு.

பாராட்டு

கோவை மாநகர் மற்றும் 11 தாலுகா அலுவலகங்களில் கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களுக்கான தனி விசாரணைப்பிரிவு துவக்கிய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு.

பயிற்சி

சென்னை புழல் அரசு பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு அய்.எஸ்.ஆர்.ஓ. மூலமாக செயற் கைக்கோள் தயாரிக்க முறையான பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.


No comments:

Post a Comment