மாமல்லபுரத்தில் கல்வெட்டுகள், கீழடிதொல்பொருட்களின் ஒளிப்படக்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

மாமல்லபுரத்தில் கல்வெட்டுகள், கீழடிதொல்பொருட்களின் ஒளிப்படக்காட்சி

சென்னை,நவ.21- உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, மாமல்லபுரம் தொல்லியல்துறை சார்பில்  கடற்கரை கோயில் வளாகம் முன்பு பழங்கால  கோயில்கள், கல்வெட்டுகள், கீழடிதொல்பொருட்கள் கண்காட்சி திறக்கும்  நிகழ்ச்சி  நடந்தது. கண்காட்சியை  மேனாள் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் துவக்கிவைத்தார். ஆண்டுதோறும்,  உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பாரம்பரிய  வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், நவம்பர் 19ஆம் தேதி ஒருநாள்  மட்டும் கட்டணமின்றி புராதன சின்னங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்களை  அனுமதிப்பது, பாரம்பரியத்தை பறைசாற்றும் புத்தகங்கள், தபால்தலை,  முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது, பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில்  பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகிறது.

கண்காட்சியை நவம்பர் 25ஆம் தேதி வரை இலவசமாக  காணலாம் எனதொல்லியல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment