பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில், ஆளுநர்கள் தங்கள் அலுவலகங்களை பா.ஜ.க. கட்சி தலைமையிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில், ஆளுநர்கள் தங்கள் அலுவலகங்களை பா.ஜ.க. கட்சி தலைமையிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர்

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கருத்து!

சென்னை,நவ.9-பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், தங்கள் அலுவலகங்களை பா.ஜ.க. கட்சித் தலைமையிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர். கருநாடக மாநி லம் தவிர்த்து தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அவ்வாறே செயல்பட்டு வருகின்றனர் என்ப தோடு, அம்மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாகவும் இருந்து வருகின் றனர் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு கருத்து தெரி வித்துள்ளார்.

ஆங்கில நாளேடான ‘டிடிநெக்ஸ்ட்' இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடுவதாவது:

தமிழ்நாடு ஆளுநர் வரிசையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் சேர்ந்து கொண்டு மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

மூன்றாவது முறையாக ஆட் சிக்கு பா.ஜ.க. வந்த பிறகு, பா.ஜ.க. தலைமையில் உள்ளவர்கள், பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை அந்த மாநிலங்களுக்கு தொல்லை தருபவர்களாக பயன் படுத்தி வருகிறது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களைப்போல் அல் லாமல், முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு நட வடிக்கைகளில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளில் தலையிடுகிறார்கள்; மாநில அரசுகளால் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார்கள், தங்களது சொந்த சித்தாந்தக் கருத்துகளை பல்வேறு இடங்களில் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளால் மாநில அரசுகளுக்கு தொல்லை தருகிறார்கள். 

மாநில அரசுகளுக்கு இது போன்ற நடவடிக்கைகளால் சங் கடம் ஏற்படுத் துவதை ஆளுநர்கள் குறிக்கோளாகக் கொண்டிருக் கிறார்கள். இதன்காரணமாக அம் மாநில அரசுகள் தங்கள் மாநில ஆளுநர்களை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. மாநில ஆளு நர்கள் வெறும் அம்புகள்தானே தவிர அவர்களை குற்றம் சொல் வதில் அர்த்தமில்லை .இவ்வாறு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.

பேராசிரியர் 

ராமு மணிவண்ணன் 

அரசியல் விமர்சகர் - பேராசிரியர் ராமுமணிவண்ணனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகள் பா.ஜ.க.வின் கட்சி அலுவலக விரிவாக்க மய்யமாக செயல்படுகின் றன. மாநில அரசு களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் எதிர்க் கட்சிகளை போன்றே அங்குள்ள ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா, மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநர்களைப் போல தமிழ்நாடு ஆளுநரும் மாநில அரசுக்கு எதிராக தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி வருகிறார். இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நிரல். இம்மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு மேலிடத்தின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்பதிலும் அதன் மூலம் எப்படி மேலும் மேலும் உயரிய பதவிகளைப் பெறலாம் என் பதிலும் குறியாக உள்ளனர்.

மேற்கு வங்க அரசுக்கு பல வகை யிலும் தொல்லை கொடுத்த அம் மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத்தலைவராக பதவி உயர் பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.

பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் அண்மையில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து 130க்கும் மேற்பட்டோர் பலியான பின்னரும் அம்மாநில ஆளுநர் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது என்று பேராசிரியர் ராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை குண்டு வெடிப்பு குறித்து அது தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பதில் ஏற் பட்ட தாமதம் குறித்து பேசியதை   ஆளுநரின் அதிகாரபூர்வ டிவிட் டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஆளுநர் 9 நாட்களுக்குப் பிறகு தமது டிவிட் டரில் வெளியிட்டுள்ளது. கவனிக் கத்தக்கதாக உள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில அரசுக்கு எதிரான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் மாநிலத்தில் பா.ஜ.க.வினருக்கு உதவவும், இங்குள்ள நிலைமையை சீர்குலைக்கவும், தங்களது எஜமா னர்களை திருப்திப்படுத்தவும்தான் இருக்கிறது என்று அரசியல் விமர் சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment