கருநாடக பா.ஜ.க. அரசின் நடவடிக்கை! மாட்டிறைச்சி விற்றவர்களின் நிலம் பறிமுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

கருநாடக பா.ஜ.க. அரசின் நடவடிக்கை! மாட்டிறைச்சி விற்றவர்களின் நிலம் பறிமுதல்

மங்களூரு, நவ  5-  மங் களூருவில்,  மாட்டிறைச்சி விற்றவர்களின் நிலத்தை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள் ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருநாடகத்தில் பசு வதைதடை சட்டம் அம லில் உள்ளது. இதனால் மாடுகளை இறைச்சிக் காக கொண்டுவந்து விற் பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி இறைச்சிக் காக மாடுகள் கொண்டு வந்த 7 பேரை கங்கநாடி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினர். இதில் அடூர் ஆடி யப்பாடியை சேர்ந்த யாகூப் மற்றும் கடிபல் லாவை சேர்ந்த ஹக்கீம், அர்க்குலாவை சேர்ந்த பதிஷ், கஞ்சிமாத்தை சேர்ந்த யூசுப் ஆகியோர்  மாட்டிறைச்சி விற்றது தொடர்பான பசுவதை தடுப்பு நடவடிக்கையாகத் தட்சிண கன்னடா மாவட்ட உதவி ஆட்சியர் மதன்மோகன், சட்ட விரோதமாக மாட்டி றைச்சி விற்றவர்களின் நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது, மேலும் ஹிந்து அமைப்புகளின் தொடர் அழுத்தம் கார ணமாக உரிய அனுமதி பெற்று மாட்டிறைச்சி விற்றுவரும் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். 

அதே நேரத்தில் மும்பைக்கு அடுத்து கொச்சி மற்றும் மங்களூரு துறைமுகங்களில் இருந்து பதப்படுத்தபப்ட்ட மாட் டிறைச்சி  வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த மாட்டி றைச்சி ஏற்றுமதி வணி கத்தில் பனியாக்களும் பார்ப்பனர்களும் ஈடு பட்டுள்ளது பல முறை சான்றுகளோடு நிரூபிக் கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment