பருவமழை மீட்புப் பணிகள் 37 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

பருவமழை மீட்புப் பணிகள் 37 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை, நவ 5- தமிழ்நாட் டில் அனைத்து மாவட் டங்களிலும் பருவமழை மீட்பு, நிவாரணப் பணி களுக்கு 37 அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளதாக வும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலை யில் உள்ளதாகவும் அமைச் சர் சாத்தூர் ராமச்சந்தி ரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக் குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், பல் வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வரு கிறது.

இந்நிலையில், சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் 3.11.2022 அன்று வரு வாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நவ. 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் சராசரி யாக 18 மிமீ மழை பெய் துள்ளது. 3.11.2022 அன்று தமிழ்நாட்டில் முந்தைய நாள் பெய்த கனமழை யால் தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 16 கால்நடைகள் இறப்பு பதிவாகியுள்ளது. 52 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புக்கு உடனடி யாக ரூ.4 லட்சம் நிவார ணத் தொகை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநக ராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர மாவட் டங்களுக்கு மொத்தம் 37 கண்காணிப்பு அலுவலர் கள் நியமிக்கப்பட்டுள்ள னர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 536 நீர் இறைப்பான்கள் தயா ராக உள்ள நிலையில், 278 இடங்களில் மழை நீரை வெளியேற்ற 340 பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

191 நிவாரண மய்யங் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 நிவாரண மய்யங்களில் 283 பேர் தங்கவைக் கப்பட்டுள்ள னர். மழை நீர் தேங்கி யுள்ளதால் பாதிப்புக் குள்ளான 15 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 55,500 உணவுப் பொட்ட லங்கள் வழங்கப்பட்டுள் ளன.அடுத்த 4 நாட்க ளுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 1149 பேரும், தமிழ் நாடு பேரிடர் மீட்புப் படையில் 899 பேரும் தயார் நிலையில் உள்ள னர். 121 பல்நோக்கு பாது காப்பு மய்யங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்றார். அமைச்சர் ஆய் வின்போது, வருவாய் நிர் வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர் மேலாண் இயக்குநர் சி.அ.ராமன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment