மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

மறைவு

திருச்சி காட்டூர் கழகத் தோழர் சங்கிலி முத்து - ஜோதி இணை யர் மகளும், இளைஞர் அணித் தோழர்  விஜய்யோகானந்தின் சகோதரியுமான  வினோதினி (42) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 18.11.2022 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம்.  தகவல் அறிந்து மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், காட்டூர் கிளை தலைவர் காமராஜ், சிவானந்தம், முபாரக், முருகன், திருநாவுக்கரசு, குணசேகரன், அம்பிகா, சங்கீதா, காட்டூர் பாலசுப்பிரமணியன் மற்றும் கழகத் தோழர்கள் மறைந்த வினோதினி உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து காட்டூர் பாப்பாக் குறிச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம்  மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்பாக்கம் ராமச்சந்திரன், செந்தமிழினியன், போளூர் பன்னீர்செல்வம், கனகராஜ் ஆகியோர் இரங்கல் உரையாற்றி னர். பின்னர் அவரது உடல் ஓயாமரி இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.  மறைந்த வினோதிக்கு கணவர் ராஜரத்தினம் குழந்தைகள் நில வெழிலன், காவியா  ஆகியோர் உள்ளனர்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை பக்கிரிசாமி அவர்களின் மகன் கழகக் கொள்கை பற்றாளர் ப.விஜயகுமார் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். காரைக்கால் மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


No comments:

Post a Comment