பஞ்சமில்லை ஏரிகளில் 80 விழுக்காடு நீர் இருப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

பஞ்சமில்லை ஏரிகளில் 80 விழுக்காடு நீர் இருப்பு!

சென்னை, நவ 20- சென் னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது 80 சதவீதத்திற் கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது. 

பூண்டி நீர்த்தேக்கத் தில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடி தண் ணீர் இருந்தது. இதனால் 22 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் வெளியேற் றப்பட்டு வந்தது. தற் போது பூண்டி நீர்த்தேக் கத்தில் 1,865 மில்லியன் கன அடி தண்ணீர் மட் டுமே உள்ளது. புழல் அதன் மொத்த கொள்ள ளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2624 மில்லியன் கன அடி உள்ளது. 

செம்பரம்பாக்கம் அதன் முழு கொள்ள ளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2635 மில்லியன் கன அடி உள்ளது. கடந்த ஆண் டைவிட 15 மில்லியன் கன அடி தண்ணீர் குறை வாக உள்ளது. சோழ வரத்தில் கடந்த ஆண்டு 781 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது, ஆனால் தற்போது 417 மில்லியன் கன அடியாக உள்ளது என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திரு வள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு அளவில் 500 மில்லி யன் கன அடி தண்ணீர் உள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போலவே சேமிப்பு உள்ளது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி யில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 935.2 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 679.2 மில்லியன் கன அடி தண் ணீரே உள்ளது. இந்த 6 ஏரிகளில் நீர் இருப்பு தற்போது 8769 மில்லியன் கன அடியாக உள்ளது. தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித் துள்ளதால் ஏரிகளில் நீர் மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

No comments:

Post a Comment