செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

செய்திச் சுருக்கம்

மீட்பு

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயில்களுக்கு சொந்தமான 52 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இந்து அறநிலையத் துறை மீட்டுள்ளது.

தேர்வுக்கு

குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதன்மை தேர் வுக்கு வருகிற 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவிப்பு.

உத்தரவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவலர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு.

எண்ணிக்கை

வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டுள்ளதால், 5 மாவட்ட கரை யோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை.

குடியிருப்புகள்

தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் புதிதாக 10,000 குடியிருப்புகள் கட்டப்படும் என விழுப்புரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல்.

காப்பீடு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என வேளாண்மை, உழவர் நலத்துறை அறிவிப்பு.

கல்லூரிகள்

நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

ஒத்திவைப்பு

மோசமான வானிலையால் நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் ஏவுதல் வரும் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment