உலக மக்கள்தொகை 800 கோடியை நெருங்குகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

உலக மக்கள்தொகை 800 கோடியை நெருங்குகிறது!

நியூயார்க், நவ.14  பூமியின் மக்கள் தொகை ஏறிக் கொண்டே செல் கிறது. செவ்வாய்க்கிழமை உலக மக்கள் தொகை 800 கோடி ஆகப்போகிறது. அய்.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்! 

பூமியில் மனிதர்களின் எண் ணிக்கை 800 கோடி ஆகப் போகும் தகவல், கடந்த ஜூலை 11 ஆம் தேதி, அய்.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள் தொகை தினமான அன் றைய நாளில் வெளியான அய்.நா. உலக மக்கள் தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக் கப்பட்டிருந்தது. அந்த இலக்கை நாளை (15.11.2022) எட்டப் போகி றோம். பூமிப்பந்து, மக்கள் தொகை யால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத் தினாலும், அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட் டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்.' நமது பன்முகத்தன்மையை கொண் டாடுவதற்கான, பொது மனித நேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ் நாளை நீட்டித்து, மகப்பேறு கால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத் துறையின் மகத்துவத்தை போற்று வதற்கான நேரம் இது' என்கிறார்.

அதேநேரம் அய்.நா. பொதுச் செய லாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது. 'உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷய மும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக் கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என் கிறார். 2050ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந் தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத் தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் அய்.நா. அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

உலக மக்கள்தொகை 700 கோடி யில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடு வதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037 இல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டு வோம். ஒட்டுமொத்த உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என் கிறார்கள் நிபுணர்கள்.

No comments:

Post a Comment