யு.ஜி.சி.அய்க் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

யு.ஜி.சி.அய்க் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

 வேதங்கள், இதிகாசங்களைப் பற்றி 

பல்கலைக்கழகங்களில் கருத்தரங்கம் நடத்தச் சொல்வதா?

யு.ஜி.சி.அய்க் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!


வாழ்க வாழ்க வாழ்கவே

அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழர் தலைவர் வாழ்கவே!


ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

மாற்றாதே மாற்றாதே!

கல்விக்கான துறைகளை

காவித் துறையாய் மாற்றாதே!

யு.ஜி.சி. வேலை என்ன?

இந்துத்துவாவைத் திணிப்பதா?

மக்களாட்சி நாட்டிலே

மனுஸ்மிருதி தேவையா?

அரசமைப்புச் சட்டம் இருக்க

அர்த்தசாஸ்திரம் ஏனய்யா?

பழம்பெருமை என்னும் பெயரால்

பழைய குப்பைகளைத் திணிக்காதே!


ஜாதிக்கொரு நீதி சொல்லும்

சாஸ்திர புராணக் குப்பைகளை

ஜனநாயக நாட்டிலே

மாணவர்களிடம் திணிக்காதே!


அவமதிக்காதே அவமதிக்காதே

ஜனநாயகத்தை  அவமதிக்காதே!

ஜாதியிருக்கும் நாட்டிலே

ஜனநாயகம் தழைக்குமா?

ஜனநாயக நாட்டிலே

ஜாதி இருக்க முடியுமா?


மக்களாட்சி மாண்புகளை

மனுஸ்மிருதியில் புதைக்காதே!

அர்த்தசாஸ்திரம் சொல்வதென்ன?

ஆரிய மேன்மை அயோக்கியத்தனம்


மனுஸ்மிருதி சொல்வதென்ன?

வர்ண ஜாதி மோசடி!

காப்போம் காப்போம்

மக்களாட்சியைக் காப்போம்


மாய்ப்போம் மாய்ப்போம்

மனுதர்மத்தை மாய்ப்போம்!

சாய்ப்போம் சாய்ப்போம்

சனாதனத்தைச் சாய்ப்போம்!

இந்து ராஷ்டிரா அல்ல இது!

இறையாண்மையுள்ள இந்தியா!

மதச்சார்பற்ற சோசலிச

ஜனநாயகக் குடியரசு!

இந்தியா இந்தியா!

இந்துராஷ்டிரா அல்ல அல்ல!

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை

இந்தியாவின் அடையாளம்!


இந்து ராஷ்டிரா என்போரெல்லாம்

இந்தியாவின் அவமானம்!

- திராவிட மாணவர் கழகம்


No comments:

Post a Comment