குடிநீர் வழங்கல் துறையில் ரூ.672 கோடி மதிப்பில் திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

குடிநீர் வழங்கல் துறையில் ரூ.672 கோடி மதிப்பில் திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 24- தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் 75 திட்டங்கள் ரூ.672 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களை சென் னையில் தலைமைச்செயல கத்தில் 22.11.2022 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சென்னை பெருநகர் குடிநீர் வழங் கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொடுங் கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; நெசப்பாக்கத்தில் உயர்தர மறுசுழற்சி நீர் நிலையம்; போரூரில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம்; புழல், புத்தகரம், சூரப் பட்டு மற்றும் கதிர்வேடு பகுதி களுக்கு விரிவான குடிநீர் வழங் கல் திட்டம்; அடையாற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து நந்தனம் விரி வாக்கம், டர்ன் புல்ஸ் ரோடு ராதா கிருஷ்ணபுரம் குடிசை பகுதிகளுக்கான கழிவுநீர் திட் டப் பணிகள்; கழிவு நீரேற்று நிலையம் 

சென்னை அய்ஸ்ஹவுஸ், கிரீம்ஸ் ரோடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர், நந்தனம், டி.எஸ். பார்க், தாமஸ்ரோடு, சுதந்திர தினப் பூங்கா பகுதிகளில் அமைந் துள்ள கழிவு நீரேற்று நிலையங் களின் மேம்பாட்டுப்பணிகள்; கிண்டி மற்றும் ஈக்காட்டுத்தாங் கலில் இடை மறித்தல் மற்றும் மாற்றுவழிகள் அமைக்கப்பட்ட பணிகள்; ஆலந்தூ ரில் சாலை யோர நீரேற்று நிலையம்; மாம் பலம் கால்வாய் வழியாக அடை யாறில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க தாடண்டர் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; கீழ்ப்பாக்கத்தில் நவீன குடிநீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனைக் கூடம்; நெசப்பாக்கம், தியாக ராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்களில் மேம்பாட்டுப் பணி கள்; சென்னையில் பல்வேறு பகுதி களில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் மேம்பாட்டுப் பணி கள்; சென்னை, கே.கே. நகர், விருகம் பாக்கம், ஜாபர்கான் பேட்டை, சைதாப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையங் களில் மேம்பாட்டுப்பணிகள் என மொத்தம் ரூ.398.51 கோடி மதிப்பீட்டில் சென்னை பெரு நகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 18 முடிவுற்ற திட்டப் பணிகள். 

18 புதிய பூங்காக்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 18 புதிய பூங்காக் கள்; அடையாறு ஆற்றின் கரையோரம் திரு.வி.க. பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை 30 ஆயிரம் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள்: மாதவ ரத்தில் 4 புதிய விளையாட்டுத்திடல்கள் மற் றும் அடையாரில் கோட்டூர்புரம் அடையாறு ஆற்றங்கரை அரு கில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்; தண் டையார்பேட்டை, திரு.வி.க. நகர், தரமணி, பெருங் குடி ஜல்லடையான் பேட்டை, மடிப்பாக்கம், சோழிங்க நல்லூர் ஆகிய இடங்களில் 6 இரவு காப்பகங்கள்; ராயபுரத்தில் 2 சிறப்பு காப்பகங்கள்; தேனாம் பேட்டை, அடையாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 வீடற்றோருக்கான காப்பகங் கள்; ஆழ்வார்பேட்டையில் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனி தொழிற்பயிற்சி நிலை யத்தில் கூடுதல் கட் டடம், மாதவரம், சின்னசேக் காட்டில் ஈரக்கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் நிலையம் என ரூ.49.49 கோடி மதிப்பீட் டிலான 38 முடிவுற்ற சென்னை மாநகராட்சி பணிகள். 

வாரிசுகளுக்கு வேலை

பணிக்காலத்தில் உயிரிழந்த 29 பேரூராட்சி பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக் காலத் தில் உயிரிழந்த 48 வாரிசு தாரர்களுக்கும், நகராட்சி நிர் வாகத்துறையில் பணி புரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 66 வாரிசுதாரர்களுக்கும் என மொத்தம் 143 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடை யாளமாக 15 பேருக்கு பணி நிய மன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இந்த தகவல்கள் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment