வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விண்ணப்பிக்கலாம்

சென்னை,நவ.11-  வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ ஒவ்வொரு ஆண்டும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.   ரூ.1,00,000 (ஒரு இலட்சம் மட்டும்)  தொகைக்கான  காசோலை, ரூ.9,000 மதிப் புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.  வீர, தீரச் செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணி யாளர்கள் உட்பட) பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்குத் தகுதியான வர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (கிஜீஜீறீவீநீணீtவீஷீஸீs) வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது லீttஜீs://ணீஷ்ணீக்ஷீபீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/என்ற இணைய தளம் மூலமாகவோ மட்டுமே 15.12.2022-க்கு முன்பாக விண் ணப்பிக்க வேண்டும்.  உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.  பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள்,  இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2023 குடி யரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவர். 


No comments:

Post a Comment