20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை,நவ.11- தமிழ்நாடு அரசு அனுப்பிய 20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக சட் டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி யுள்ளார்.

சென்னை தலைமைச் செய லகத்தில், தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி   செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "2022-_2023 கல்வியாண்டிற் கான முதுநிலை சட்டப் படிப்பு களுக்கான இணையவழி ஒற்றை சாளர கலந்தாய்வுக்கு சட்டக் கல்வி இயக் கத்தின் வாயிலாக 1433 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. கடந்த நவ.5ஆம் தேதி சட்டக் கல்வி இணைய தளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் முதல் 10 இடங் களைப் பிடித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கடிதம்   வழங் கப்பட்டது" என்றார்.

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் தொடர்பாக அய்ஏஎஸ்  தலைமையில் ஆணையம் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று இன் னும் வரவில்லை. ஆளுநர் அதற்கான ஒப்புதல் வந்தவுடன் ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் தலைமையில் அமைக் கப்படும். 

ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தின் ஷரத்துகள்தான் தற்போது அனுப்பியுள்ள அவசர சட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. புதிதாக எதுவும் இல்லை. ஒருவேளை விளக்கம் எதுவும் கேட்கப்பட்டால், விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம். ஆளுநரிடம் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் சிலவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்துள்ளோம். ஆளுநரை கையெ ழுத்திடச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது" என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment