பேரிடரை
மூன்று நாட்களுக்கு கனமழை எதிரொலியாக பேரிடரை கையாள தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவு
சென்னை பல்கலைக்கழகம் நடத்திய 4ஆவது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்து உயர்கல்வித் துறை உத்தரவு.
அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்படி, 100 நாட்களுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சான்று
அஞ்சல் துறை மூலம், ஒன்றிய அரசு மற்றும் வைப்பு நிதி ஒய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் சேவையை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடங்கியது.
நடவடிக்கை
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை திடீரென நிறுத்திய நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கேபிள் டிவி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தேர்வு
தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் 92 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வை 1.91 லட்சம் பேர் எழுதினர்.
சிறார்களை...
முதல் முறை குற்றச் செயலில் ஈடுபடும் சிறார்களை கையாளும் நடைமுறைகள் கடுமையாக இல்லாமல், அவர்களை உளவியல் ரீதியாக கையாண்டு திருத்த காவல் துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சிறைத் துறை தலைமை இயக்குநர் அம்ரேஷ் குமார் புஜாரி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வலியுறுத்தல்
கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 83,350 ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கப் பட்டுள்ளதாக வேளாண் துறை கணக்கெடுக்கும் பணியில் தெரிய வந்துள்ளது.