தமிழ்நாட்டில் புதிதாக 84 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 84 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில்  புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தமிழ்நாட்டில்  ஆண்கள் 47, பெண்கள் 37 என மொத்தம் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 93 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  ஒரே நாளில் 121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 54 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால்  யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 789 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில்...

 இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை  இன்று (12.11.2022) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,64,810 பேர் ஆகும். புதிதாக தொற்றால் 6 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,21,538பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 12,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில்  மட்டும் 1,38,075 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல் நடக்கும் 

குஜராத், இமாசலப் பிரதேசத்தில் 

ரூ.65 கோடி பரிசுப் பொருட்கள், 

ரூ.18 கோடி ரொக்கம் பறிமுதல்

அகமதாபாத்,. நவ. 12- சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் ரூ.65 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், ரூ.18 கோடி ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இமாசலப்பிரதேசத்தில் இன்று (12.11.2022) சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி, அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங் களை நேற்று வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநிலத்தில் தேர்தல் அறிவித்து சில நாட்கள்தான் ஆகி இருக்கிறது. அதற்குள் அங்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மறைத்து ரூ.64 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள பொம்மை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.66 லட்சம் ரொக்கம், ரூ.3 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள மது, ரூ.94 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.27 கோடியே 21 லட்சம் ஆகும். அதனுடன் ஒப்பிடுகையில், இது சாதனை அளவாகும். 

இமாசலபிரதேசத்தில், ரூ.17 கோடியே 18 லட்சம் ரொக்கம், ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள மது, ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.41 லட்சம் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட ரூ.9 கோடி மதிப்புள்ள பொருட்களுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம். சமீபத்தில் நடந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் ரூ.9 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment