வேலூர் சி.எம்.சி.யில் ‘ராகிங்' 7 மாணவர்கள் இடைநீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

வேலூர் சி.எம்.சி.யில் ‘ராகிங்' 7 மாணவர்கள் இடைநீக்கம்

வேலூர். நவ  12- ‘ராகிங்' பிரச்சினை தொடர்பான புகாரில் சி.எம்.சி. மருத் துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.  

வேலூர் பாகாயத்தில் சி.எம்.சி. மருத்துவக்கல் லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் பயி லும் மாணவர்கள் விடுதி யில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை முதுநிலை மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளா கத்தில் ஓட விட்டு ராகிங் கில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குட்டிக்கர ணம், தண்டால் எடுப்பது, மாணவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக் கச் செய்வது என அவர் கள் கொடுமை செய்துள் ளனர். 

இதுகுறித்த காணொலி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கும் புகார் கடிதம் வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி முது நிலை மாணவர்கள் 7 பேரை இடைநீக்கம் செய் தனர். 

இந்த நிலையில் அவர்கள் மீது மருத்துவக் கல்லூரி முதல்வர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி 7 மாணவர்கள் மீது காவல்துறையினர் 2 பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 7 மாண வர்களில் ஒருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என் றும், மற்ற 6 பேரும் ஆந் திர மாநிலத்தை சேர்ந்த வர்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்த னர். ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையப் பிணையில் விடு விக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment