2 லட்சம் கோப்புகள்: தமிழ்நாட்டில் மின்னணுமயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

2 லட்சம் கோப்புகள்: தமிழ்நாட்டில் மின்னணுமயம்

சென்னை, நவ. 22- தமிழ்நாட் டில் மின்-அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் அரசு கோப்புகள் மின் னணு மயமா க்கப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழ லைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. அதன்படி, சட்டப் பேரவை செயலகத்தின் பல்வேறு ஆவணங்கள், கோப்புகள் கணினிமய மாக்கப்பட்டு வருகின் றன. ‘காகிதமில்லா சட் டப்பேரவை’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் காகிதச் செலவை குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களி லும் காகித கோப்புகளுக்கு பதில், மின்னணு கோப்பு களைத் தயாரிக்கும் நடை முறை ‘மின்-அலுவலகம்’ திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படுகிறது. இதன் மூலம், அரசு அலுவலகங் களின் வழக்கமான பணி கள் டிஜிட்டல் மயமாக் கப்பட்டு வருகின்றன. இதற் காக பிரத்யேக மென் பொருள் உருவாக்கப் பட்டு, 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், அலுவ லகங்கள் அதைப் பயன் படுத்தி வருகின்றன.

மின்-அலுவலகம் திட்டம் செயல்படுத்தப் பட்டு ஓராண்டாகியுள்ள நிலையில், இதுதொடர் பாக தகவல் தொழில்நுட் பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 

மின்-அலுவலகம் திட் டத்தின் கீழ் தலைமைச் செயலகத்தில் அனைத்து மேஜைகளும் கணினி பயன்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள் ளன. இதுவரை 80 ஆயி ரம் கோப்புகள் மின்னணு மயமாகியுள்ளன. தற் போது அனைத்து கோப் புகளும் மின்னணு வடிவி லேயே தயாரிக்கப்படுகின் றன. பழைய கோப்புகளை மின்னணு மயமாக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.

குறிப்பாக, போக்குவ ரத்து, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள், கால் நடை பராமரிப்பு, வரு வாய் உள்ளிட்ட துறை களில் காகிதக் கோப்புக ளின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்து, கணினி மயமாக் கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வருவாய், ஊரக வளர்ச்சி, கனிமவளம் உள்ளிட்ட துறைகள் மின்-அலுவல கம் திட்டத்தை சிறப்பா கச் செயல்படுத்தி வருகின் றன.

மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் இதுவரை 1.25 லட்சம் கோப்புகள் மின்னணு மயமாகியுள்ளன. கடந்த ஓராண்டில் 2.05 லட்சம் கோப்புகள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. ஒரு கோப்புக்கு சராசரி யாக 10 தாள்கள் என்று வைத்தாலும், 2 கோடிக்கு மேல் காகிதப் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் செலவு குறைந்துள்ளது. 

-இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment