அரசுப் பள்ளியை தரம் உயர்த்த 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

அரசுப் பள்ளியை தரம் உயர்த்த 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை

ஈரோடு, நவ 15- தாளவாடி அருகே அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித்தர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண் ணியிடம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற் றது. 

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண னுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக்கொண் டார். தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோட்டாடை, ஒசட்டி, குளியாடா, புதுக் காடு, சோக்கிதொட்டி, உப்பட்டி, அட்டப்பாடி, சீகட்டி ஆகிய மலைக் கிராம மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில், 60 சதவீதம் பேர் பழங்குடியின மாணவ- மாணவிகள். அங்கு 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு 9ஆ-ம் வகுப்பு சேர வேண் டும் என்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. பேருந்து வசதி இல்லாத தால் குழந்தைகள் கல் வியை இடையிலேயே நிறுத்தி விடும் நிலை ஏற் படுகிறது. கோட்டாடை நடுநிலை பள்ளிக் கூடத்தை உயர்நிலை பள்ளிக்கூடமாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து வருகிறோம். 

இதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு ஊர் மக்கள் சார்பில் ரூ.1 லட் சம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஆனால், இதுவரை பள் ளிக்கூடம் தரம் உயர்த் தப்படவில்லை.

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக் கூடத்தை தரம் உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. எனவே, இந்த பள்ளிக்கூடம் அமைய கோட்டாடை கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து தர செய்ய வேண் டும். இவ்வாறு அந்த மனு வில் அவர்கள் கூறி இருந் தனர்.

No comments:

Post a Comment