2021 மராத்தானில் வெறும் காலில் ஓடிய மாணவிகளுக்கு காலணி (ஷு) வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்திய கனிமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

2021 மராத்தானில் வெறும் காலில் ஓடிய மாணவிகளுக்கு காலணி (ஷு) வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்திய கனிமொழி

வென்று காட்டிய சகானா

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப் பினர் திமுக துணைப் பொதுச்செயலா ளர் கனிமொழி மாணவிகளின் கல்வி யிலும் அவர்களின் விளையாட்டி லும் பேருதவி புரிந்து வருகிறார். அவரிடம் உதவி பெறும் மாணவிகளும் தங்க ளுக்கு உதவிகள் புரிந்த நாடாளு மன்ற உறுப்பினருக்கு அனைத்து துறைகளிலும் மிளிர்ந்து நற்பெயர் பெற்றுத்தருகின்றனர்.

 தூத்துக்குடி நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வ.உ.சிதம்பர னாரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு `மினி மராத் தான்’ போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், தூத்துக்குடி மட்டுமல்லா மல், நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட் டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடைபெற்ற இந்தப் போட்டியை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பு துவங்கிய மராத்தான் ஓட்டம் தமிழ்ச்சாலை, வ.உ.சி சாலை, கிரேட் காட்டன் சாலை, பழைய துறைமுகம், ஜார்ஜ்ரோடு வழியாக 9.கி.மீ தூரம் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவ டைந்தது. ஆண்கள் பிரிவில் 900 பேர், பெண்கள் பிரிவில் 800 பேர் என மொத்தம் 1,700 பேர் பங்கேற்றனர்.பெண்கள் பிரிவில் இரண்டாமிடம், மூன்றாமிடம் தவிர முதல் 10 இடங் களில் முதலிடம் உட்பட 8 இடங்களை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வ ராபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.பி. கனிமொழி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங் கினார்.

பெண்கள் பிரிவில் பதக்கங்களை வென்ற பல மாணவிகள் அவர் காலில் ஷூ இல்லாமல் வெறும் காலுடன் கலந்துகொண்டு  வந்ததைக் கவனித்த கனிமொழி, ``என்னம்மா காலுல ஷூ இல்லாம நடந்து வர்ற, ஷூ எங்கம்மா?” எனக் கேட்க, ``எங்கிட்ட மட்டுமில்ல, எங்க ஊர்ல இருந்து வந்திருக்கிற 9 பொண்ணுங்ககிட்டயுமே ஷூ கிடையாது மேடம். வெறுங்காலுல தான் ஓடினோம். முதல் பத்து இடங் களில் 8 பரிசுகள் நாங்கதான் வாங்கியிருக்கோம்”  கூறினார்கள்

 அவர் தோளைத் தட்டிக்கொடுத்த கனிமொழி, உடனே தனது உதவியா ளரை அழைத்து 9 பேருக்கும் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக்கொடுக்கச் சொன்னார். பரிசளிப்பு விழா முடி வடைந்ததும் அந்த 8 மாணவிகள், மற்றும் வெறும் காலில் ஓடிய மேலும் 5 மாணவிகள் என மொத்தம் 13 பேர், தூத்துக்குடியில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனைக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு மாணவிகள் தங்களுக்குப் பிடித்த நிறத்தில் ஓட்டப் பந்தய காலணிகளை தேர்வு செய்து கொண்டிருக்கும்போதே கடைக்கு வந்த கனிமொழி, "என் னம்மா ஷூ சரியா இருக்குதா..?” எனக் கேட்க, "சரியா இருக்கு மேடம். ரொம்ப நன்றி மேடம்” என்றதும், "நல்லா படிக்கணும், நல்லா விளையா டணும்” எனச் சொல்லி தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். ஷூக்களை காலில் அணிந்த 9 மாண விகளும் மகிழ்ச்சியுடன் ஊருக்குச் சென்றனர்.

அன்று வெறுங்காலில் ஓடி கனி மொழி கையால் ஓட்டப் பந்தயக் காலணிகளை வாங்கிய மாணவிகளுள் ஒருவர் தான் சகானா-நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்று தங்களுக்கு திறமைகள் உண்டு வாய்ப்பு கிடைத்தால் ஒலிம் பிக்கிலும் வென்றுகாட்டுவோம் என்று தன்னுடைய செயலால் சொல்லிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment