தமிழர் தலைவர் பிறந்த நாளை கொள்கை பரப்பு விழாவாக நடத்துவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

தமிழர் தலைவர் பிறந்த நாளை கொள்கை பரப்பு விழாவாக நடத்துவோம்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி, அக். 22- தூத்துக்குடி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.10.2022 அன்று தூத்துக் குடி பெரியார் மய்யத்தில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் மு. முனியசாமி வரவேற்புரையாற் றினார். தலைமையேற்ற மாவட்டத் தலைவர் மா. பால்ராசேந்திரம் கூட்டத்தின் நோக்கம் பற்றிக் கோடிட்டுக் காட்டினார். முன் னிலை வகித்த மண்டலத் தலைவர் சு.காசி தம் உரையில் மேல்மாந் தையில் பெரியார், அம்பேத்கர் சிலைகளை வைப்பதற்கான மூன் றாண்டு காலப் பணிகளையும், இடையூறுகளையும் எடுத்துக்கூறி இன்று மதுரை உயர்நீதிமன்றம் மூலம் நல்லதொரு தீர்ப்புக் கிடைத் துள்ளதையும் தோழர்களுக்கு விளக்கிக் கூறினார். தலைமையிடு கின்ற கட்டளைகளையும் என்றும் தட்டாமல் செய்வதுபோல் இன் றும் செய்து தருவோம் எனக் கூறினார். 

வருகைதந்த மாநிலத் தொழிலா ளரணிச் செயலாளர் மு. சேகர் தனது உரையில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டுகால ‘விடுதலை’ ஆசிரியர் பணிக்காக நாம் பரிசாக வழங்குவ தாக அறிவித்த சந்தாக்கள் 60 ஆயி ரத்தில் இதுவரை பதியை நிறைவு செய்துள்ளோம். பாக்கியாக இருக் கக்கூடிய சந்தாக்களையும் வசூ லித்து சொன்னதை நிறைவு செய் வோம் என்றார். மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், மாநகராட்சி, நகராட்சி, பேருராட் சித் தலைவர்கள், உறுப்பினர்கள், விடுபட்ட முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரின் பட்டியலைத் தயா ரித்து வைத்திடுங்கள். நாமெல் லோரும் ஒருங்கிணைந்து நவம்ப ரில் நம் இலக்கை முடித்து தலை வரின் பிறந்தநாள் விழாவில், டிசம் பரில் வழங்கிடுவோம் என்றார். இருவருக்கும் மாவட்டக் கழகம் சார்பில் மண்டலத் தலைவர் பய னாடை அணிவித்தார். தோழர்கள் வழக்குரைஞர். த. இலிங்கராஜ், பிரசாத் ஆகியோரும் தங்களின் கருத்துக்களைக் கழக எதிர்கால வளர்ச்சி குறித்து எடுத்துக் கூறினர். 

இறுதியாக, புதிய உறுப்பினரும், தகவல் தொடர்பு அமைப்பாள ருமான இ.ஞா. திராவியம் தம் நன் றியுரையில், மாவட்டக் கழகத் திற்குப் புதிய இளைஞர்களைச் சேர்க்க முதல் கட்டமாகத் தோழர் கள் இல்லத்திற்குச் சென்று கலந்து ரையாடி அவர்களின் நண்பர்க ளுக்கும் பெரியாரியலைப் புரிய வைக்கும் பணி நடைபெறவிருக் கிறது. அடுத்து, கிராமங்கள்தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்திட ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் கூறி வந்திருந்த அனைவ ருக்கும் நன்றி கூறி முடித்தார். 

கூட்டம் சரியாக 10.45க்கு நிறைவு பெற்றது. இக்கலந்துரை யாடலில் மாவட்ட இணைஞரணிச் செயலாளர் த. செல்வராஜ், மாவட்ட மாணவர் மாணவர் கழகத் தலைவர் மா. தெய்வப்பிரியா, செ. வள்ளி, ம. அசோக்குமார், பொ. போஸ், செ.செல்லத்துரை, 

கி. கோபால்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள். 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழர் தலைவரின் விருப்பத் தினையும், நாம் வழங்குவதாக அறிவித்த அறிவிப்பினையும் நிறைவேற் றிடும் வகையில் நவம்பரில் ‘விடு தலை’ சந்தாக்களை வசூலித்துத் தலைவரிடம் வழங்கிடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. தமிழர் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் நாளை பெரியாரின் கொள்கை பரப்பு விழாவாகச் சிறப்புடன் நடத்திடுவ தென முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment