தருமபுரி, அக். 22- தருமபுரி மாவட்டத்தில் திராவிட மாணவர் கழகம், திராவிடர் இளைஞரணி சார்பில் Ôதீபாவளி - திடுக்கிடும் உண்மைகள்Õ துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. தீபாவளி என்றால் என்ன? எனும் விளக்க துண்டறிக்கையினை விடு தலை வாசகர் வட்டச்செயலாளர் சுதாமணியால் தையல் பயிற்சி பள்ளிக்கு வரக்கூடிய கிராமப்புற மகளிருக்கு கொடுக்கப்பட்டு கிராமங்கள் தோறும் துண்டறிக்கை சேர்க்கும் வண்ணம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
‘தீபாவளி - திடுக்கிடும் உண்மைகள்' கழக துண்டறிக்கை திராவிட மாணவர் கழகம் மற்றும் திரா விடர் கழக இளைஞரணி தீர்மானத்தின் படி, தருமபுரி திராவிடர் கழகத்தின் வழிகாட்டலின் படி, தருமபுரி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து தோழர்களோடு துண்டறிக்கை வழங்கினர். மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்மா. செல்லதுரை, மண்டல மாணவர் கழகச் செயலாளர் இ. சமரசம் ஆகியோர் துண்டறிக்கை வழங்கினர்.


No comments:
Post a Comment