பேராவூரணி சு.இராமன் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

பேராவூரணி சு.இராமன் படத்திறப்பு

பட்டுக்கோட்டை, அக். 12- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் ஆசிரியர் கி.வீரமணி நகரில் திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், திமுக இரண்டாவது வார்டு துணைச் செயலாளர் இரா.முருகேசன், மாவடு குறிச்சி  செல்வி நீலகண் டன் வெட்டன் விடுதி அஞ்சம்மாள், ஆனந்த ஜோதி, அத்தாணி, நீலா வதி, கருணாநிதி, இவர் களின் தந்தை, திராவிட முன்னேற்றக் கழக  பேரா வூரணி பகுதி மூத்த உறுப் பினர் சு.இராமன் கடந்த செப்டம்பர் 20 ஆம் நாள் காலை 10 மணி அளவில் இயற்கை எய் தினார். 

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக் குமார், கழக அமைப்பா ளர் ஒரத்தநாடு இரா குணசேகரன், பேராவூ ரணி சட்டமன்ற உறுப்பி னர் அசோக் குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மா கோவிந்த ராஜன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலா ளர் மல்லிகை வை.சிதம் பரம், புதுகை மண்டல தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் பெ.இராவணன், அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் கமாரிமுத்து உள்பட ஏராளமானோர் மாலை வைத்து வீரவ ணக்க மரியாதை செலுத் தினர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களும் அலைபேசி வழியாக இரா.நீலகண் டனிடம் ஆறுதல்படுத்தி பேசினார்கள்.

அதனை ஒட்டி  

சு இராமன் படத் திறப்பு நிகழ்ச்சி அக்டோபர் 7ஆம் நாள் காலை 11 மணி அளவில் பேராவூ ரணி ஆசிரியர் கி.வீரமணி நகரில் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலா ளர் மல்லிகை வை.சிதம் பரம் தலைமையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்த ராசு, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி, திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினர் கழக சொற்பொழிவாளர் அப்துல் மஜீது, மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.கே.ஆர்.நாராயணன், வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராம்சா, சித திரு வேங்கடம், பேராவூரணி தொகுதி வி.சி.க. தொகுதி அமைப்பாளர் அரவிந்த் குமார், சோழமண்டல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்கள் சமூக சேவை மன்ற தலைவர் திருவாரூர் ரஜினிகாந்த் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட அவை தலைவர் சுபசேகர் மறைந்த சு இரா மன் படத்தை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment