ஹிந்தியை மட்டுமே முன்னிறுத்தும் பாஜக கருநாடக மேனாள் முதலமைச்சர் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

ஹிந்தியை மட்டுமே முன்னிறுத்தும் பாஜக கருநாடக மேனாள் முதலமைச்சர் கண்டனம்


பெங்களூரு அக்.9  மேனாள் முதலமைச்சர் குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 

ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணை யம் தேர்வுகளை ஹிந்தி-ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பு, மொழி ஏற்றத்தாழ்வுக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?. ஒன்றிய அரசுக்கு மாநில மொழிகளை ஒழிக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பது போல் தெரிகிறது. கன்னடம் உள்பட தென்இந்திய மொழிகள் மீது சகிப் பின்மை, விரோதத்தை ஒன்றிய அரசு வெளிப்படுத்துகிறது. கூட்டாட்சித் தத்துவத்தில் ஆட்சி செய்யும் கட்சிக்கு மாநில மொழிகள் தேவை இல்லை என்பதை இது காட்டுகிறது. ஒன்றிய பணியாளர் ஆணையத் தேர்வை கன்னட மொழியில் நடத்த வேண்டும். கரு நாடகத்தில் உள்ள ஒன்றிய அரசின் பணிகளுக்கு கன்னடர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தால் பா.ஜனதா கன்னடர்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment