ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

 கடந்த கால ஜாதியக் கொடுமைகளுக்கு பார்ப்பனர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது; அவர்களது நடவடிக்கைகளில் அதைக் காட்ட வேண்டும் என மோகன் பகவத்திற்கு சரத் பவார் பதிலடி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

 முதலாளிகளை - கார்ப்பரேட் நிறுவனங்களை நான் எதிர்க்கவில்லை; ஆனால் ஒரே முதலாளியின் ஏகாதிபத்தி யத்தை எதிர்க்கிறேன் என்கிறார் ராகுல் காந்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 அய்க்கிய முன்னணி அரசு பதவி விலகும் போது, 2013-2014 இறுதியில் சிகிஞி 1.7% ஆகக் குறைக்கப்பட்டது, சிறிமி பணவீக்கம் 9.4% ஆக இருந்தது (இது 2014-2015இல் 5.9% ஆகக் குறைந்தது), வெளிநாட்டுச் செலாவணி கையி ருப்பு $15.5 அதிகரித்துள்ளது. பில்லியன் மற்றும் மாற்று விகிதம் ரூ.58.4. வரலாற்றைப் படிக்க விரும்புவோருக்கு இது ஒரு வரலாற்றுத் துண்டு என ப.சிதம்பரம் விளக்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 இந்தியாவில் சீன ராணுவத்தை, பிரதமர் மோடி குழப்பிவிட்டார். ஒன்றிய அரசின் வெளிவிவகாரங்களை மோசமாகக் கையாள்வதற்கான அடிப்படைப் பிரச்சி னையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எழுப்பும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

 ஒன்றிய அரசு 50% இடஒதுக்கீட்டைத் தாண்ட முடியுமானால், ஏன் மாநில அரசு மீறக்கூடாது?: கருநாடக நீதிபதி நாகமோகன் தாஸ் பேட்டி.

தி டெலிகிராப்:

சர்வாதிகார சக்திகளால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டு விருப்பத்திற்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றிணைய வேண்டும் என்று லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment