சூரியனை ஆய்வுசெய்ய செயற்கைக் கோள்: சீனா ஏவியுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

சூரியனை ஆய்வுசெய்ய செயற்கைக் கோள்: சீனா ஏவியுள்ளது

பெய்ஜிங், அக். 12 - சூரியனின் ரகசியங்களைக் கண்டறியும் வகையில் ஆய்வுக்கூடம் ஒன்றை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இத்தகவலை சீன வானொலி செய்தி நிறுவனம் தெரிவித்துள் ளது. விண்வெளியை அடித்தளமாக கொண்ட முன்னேறிய சூரிய ஆய்வுக்கூடம் அக்டோபர் 9ஆம் நாள் ஞாயிறு காலை 7:43 மணிக்கு சீனாவின் வட  மேற்கிலுள்ள ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மய்யத்திலிருந்து லாங் மார்ச்-2டி ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றி கரமாக செலுத்தப்பட்டது. திட்ட மிடப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் அது தடை யின்றி நுழைந்தவுடன், இந்த ஏவுக் கடமை  நிறை வடைந்தது. 

சூரியனின் இரகசியங்களை கண்டறிவதில் சீனாவின் முயற்சிகள் இதன் மூலம்  முன்னெ டுத்துச் செல்லப்படும் என்று கூறப் பட்டுள்ளது. சூரிய ஒளிவீச்சு வெடிப்பு மற்றும் சூரிய ஒளிவட்ட வெளியேற்றத்துக்கும், சூரிய காந்தப் புலத்துக்கும் இடையேயான தொடர்புகள் உள்ளிட்டவை பற்றிய ஆய்வுக்காக செயல்படும் இந்த ஆய்வுக்கூடம், விண்வெளி வானிலை முன்னறிவிப்புக்கு ஆதரவான தரவுகளையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment