விவசாய படிப்பு முடித்தோருக்கு வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

விவசாய படிப்பு முடித்தோருக்கு வேலை

 இந்திய வன ஆராய்ச்சி கல்வி கவுன்சிலின் கீழ் செயல்படும் கோவையில் உள்ள வன மரபியல் & மரம் வளர்ப்பு கல்வி நிறுவனத்தில் (IFGTB)  காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : எம்.டி.எஸ்., 5, லோயர் டிவிஷன் கிளார்க் (எல்.டி.சி.,) 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (டி.ஏ.,) 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு, எல்.டி.சி., பிரிவுக்கு பிளஸ் 2, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு பி.எஸ்சி., (தாவரவியல் / விவசாயம்) முடித்திருக்க வேண்டும்.

வயது : 25.11.2022 அடிப்படையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 21 - 30, மற்ற பிரிவுகளுக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, திறன் (ஸ்கில்) தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : எம்.டி.எஸ்., எல்.டி.சி., டி.ஏ., முறையே ரூ. 500, 1000, 1500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250, 500, 750. கடைசிநாள் : 25.11.2022

விபரங்களுக்கு : ifgtb.icfre.gov.in


No comments:

Post a Comment