நியாயவிலைக் கடைகளில் 6500 காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

நியாயவிலைக் கடைகளில் 6500 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகளில் 'விற்பனையாளர்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : சென்னை 344, திருவள்ளூர் 237, செங்கல்பட்டு 175, காஞ்சிபுரம் 274, விழுப்புரம் 244, கடலூர் 245, கள்ளக்குறிச்சி 116, திருப்பூர் 240, நீலகிரி 76, மதுரை 163, திண்டுக்கல் 112, தேனி 85, ராமநாதபுரம் 114, சிவகங்கை 103, விருதுநகர் 164, தூத்துக்குடி 141, திருநெல்வேலி 98, தென்காசி 83, கன்னியாகுமரி 134 உட்பட 6500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

ஊதியம் : முதல் ஓராண்டுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 6250 வழங்கப்படும். பின் ரூ. 8600 - 29,000 ஊதிய விகிதத்தில் வழங்கப்படும்.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 14.11.2022 மாலை 5:45 மணி

விபரங்களுக்கு :tncu.tn.gov.inNo comments:

Post a Comment