இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பேட்டி

திருநெல்வேலி, அக்.20   "இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் மனித உரிமை ஆணையம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது" என்று மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கூறினார். 

மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன்  நெல்லை வண்ணை நகரில் உள்ள அரசு சுற்றுலா மாளி கையில் பல்வேறு வழக்குகள் தொடர் பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் மனித உரிமை ஆணைய நீதிபதியாக கடந்த 2017ஆ-ம் ஆண்டு பொறுப்பேற்றேன். அடுத்த மாதம் (நவம்பர்) 1-ஆம் தேதியுடன் பதவிக் காலம் முடிவடைகிறது. கடந்த 5 ஆண்டு களில் 19,298 வழக்குகள் புகார் அடிப்படையில் பெறப்பட்டு ஆரம்ப நிலையிலேயே 10,448 வழக்குகள் விசாரணைக்கு தகுதி யற்றதாக நிராகரிக்கப்பட்டது. 8,030 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை அடிப்படையில் முடிவு பெற் றுள்ளது. 2,055 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.

மாநிலம் முழுவதும் அரசு ஊழி யர்கள், அதிகாரிகள் மீது போடப்பட்ட 828 வழக்குகள் முடித்து வைக்கப் பட்டுள்ளது. இதில் 406 வழக்குகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக 35 வழக்குகள் விசாரிக்கப்பட்டு நட வடிக்கைக்காகவும், இழப்பீடு தொகை வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக் கப்பட்டு உள்ளது. வருவாய் துறையில் 14 வழக்குகள், மாநகராட்சிகள் மீது 5 வழக்குகள், மின்வாரியம் தொடர்பாக 5 வழக்குகள் ஆகியவை விசாரிக் கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு உத்தரவிடப் பட்டது. சிறப்பான செயல்பாடு மாநில மனித உரிமை ஆணையம் குறித்து பொது மக்களிடம் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 புகார்கள் ஆணையத்திற்கு வருகிறது. மனித உரிமை ஆணையம் மற்ற மாநிலங்களில் உயர் அதிகரிகள் பரிந்துரையுடன் முடிந்துவிடும். ஆனால் தமிழ் நாட்டில் மனித உரிமை ஆணையம் ஒரு நீதிமன்றம் போல் செய்யபடுகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல் படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment