தூத்துக்குடி, அக். 15- தூத்துக்குடி ‘உண்மை வாசகர் வட்டம்’ சார்பில் 8.10.2022 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் பெரியார் மய்யத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்
மு.முனியசாமி தலைமை வகித்தார். ‘சனாதனம் என்பதுதான் என்ன?’ என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கை சீ.மனோகரன் தொடக்கவுரையாற்றித் தொடங்கி வைத்தார்.
அவர்தம் உரையில், சனாதனம் என்பது மாற்றக்கூடாதது என்று கூறிவரும் சனாதனிகளின் விழிபிதுங்கிடத தந்தை பெரியார் அவர்கள் அத்தனையையும் மாற்றி யமைத்தார். அந்த மாற்றம்தான் நிலத்தொழில் மாறி இருக்கிறது. படித்துப் பலரும் பட்டம் பெற் றுள்ளோம். தீண்டாமை என்று கூறிப் பொது வீதியையே பாரா தோர் இன்று அவ்வழியே சென்று, பொது இடங்களில் பணியாற்றித் திரும்புகிறோம். ஆலயங்கள், அனை வரையும் வரவேற்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. பெண்ணென் றால் ஒதுக்கி வைத்திடும் பேதைமை ஒழிக்கப்பட்டு, ஆண்களுக்குச் சமமாக உரிமை பெற்றுப் புரட்சிப் பெண்களாய் வலம்வரச் செய்யப் பட்டுள்ளது. இவையெல்லாம் சனாதன ஒழிப்பின் மூலமாகத் தந்தை பெரியாரின் அயராத உழைப்பின் பயனாக நம் சமுதாயம் பெற்ற உரிமைகளே என்று எடுத் துக் கூறினார்.
அடுத்து, சிறப்புரையாற்றிய மாவட்டத் கழகத் தலைவர், கழகச் சொற்பொழிவாளர் மா. பால் ராசேந்திரம், “சனாதனம் என்பது மாறாதது; மாற்றக்கூடாதது; மாற்றவே கூடாதது என்பதுதான் பார்ப்பனக் கூட்டத்தின் ஒப்பாரி யாகும், ஏன் மாற்றவே கூடாது? மாற்றினால், மாறினால் பார்ப்ப னர் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். உழைக்காது உண்டு கொழுத்திட முடியாது. வர்ணா ஸ்சிரம தர்மம் முற்றிலும் தலை கீழாக மாறிவிடும். நாம் ஏன் தற் பொழுது சனாதனம் பற்றி வேக மாகக் கருத்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது? ‘தர்மசன் சாத்’ என்ற பண்டாரக் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் கூடி இந்தி யாவையே மாற்றியமைக்கப் போவ தாக முடிவு கட்டியுள்ளார்கள். இந்தியாவை இந்துராஷ்டிரமாகப் பெயர் மாற்றுவார்களாம்.
இந்துக்களின் நாடாம் அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சட்டம் கூடாதாம். மனுஸ்மிருதியே இனிமேல் அரசியல் சட்டமாகு மாம். சுருதி என்பது வேதங்கள். ஸ்மிருதி என்பது சட்டமே. அது செய்த அட்டூழியம் தான் மாட்டிற் காக மனிதனைக் கொல்லும் சட் டம், வேதமே தமிழர்க்குத் தெரியக் கூடாது என்று பழிவாங்கிய சட்டம். மதுரையில் வடமொழியை உச்சரித்தத் தமிழ்ப் புலவனைக் கழுவேற்றிக் கொன்ற சட்டம். மேலும், இசுலாமியர், கிறித்துவர் வாழ்ந்து கொள்ளலாம். ஆனால், வாக்குரிமை கிடையாதாம். சொல் வது யார்? வந்தேறிகளின் வாரிசு கள். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். சனா தனத்தைக் காட்டி நம்மைச் சூத் திரர்களாக்கி வைத்தார்கள்.கல்வி கிடையாது, நில உரிமை கிடை யாது. கட்டிய மனைவியே நமக்குச் சொந்தம் கிடையாது. ஆண் மகவு வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. சம உரிமை கிடையாது தண்டனைகள் கூடப் பார்ப்பா னர்க்கு அனுகூலமாகவே நிறை வேற்றப்பட்டன. பாவயோனியில் பிறந்தோர் எனக் கூறிப் பெண்கள் உரிமையற்ற மரக்கட்டைகளாய்க் கருதப்பட்டார்கள். மங்கலங் களாய்ப் பெற்ற கிராமங்கள், உத்த மதானபுரம், அக்ரஹாரம் வந்த வரலாறு எனப் பார்ப்பனர் கொள் ளையைத் தெளிவுபடுத்தி ஒவ் வொன்றையும் தகுந்த சான்றுகளு டன் விளக்கிக் கூறினார்.
திராவிடப் பெருங்குடி மக்களை ஏய்த்துப் பிழைத்து வந்த பார்ப்பனக் கூட்டம் இன்று அவ் வாறு அனுபவிக்க எதிர்வரும் தடைகளை உடைத்திடத்தான் மீண்டும் சனாதனத்தைப் புதுப் பிக்கத் துடிக்கிறது. நெருக்கடி களிலிருந்து மீண்டு வந்த நாம் திராவிட மாடலைத் தூக்கிப் பிடித்து சனாதனத்தை நொறுக்கிட வேண்டும். அதற்குப் பெரியாரியலே நன்மருந்து அதனை உட்கொள் வாம். பதிலுரைப்போம். உரிமை கொண்ட மக்களாய்த் தலை தாழாது வாழ்வோம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக மொ.ஜெகவீர கட்டபொம்மு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கி.கோபால்சாமி, பெ.கத்தார்பாலு, திருவைகுண்டம் ஒன்றியத் தலைவர் சு.திருமலைக் குமரேசன், சொ.பொன்ராஜ், செ.செல்லகுமார், ம.அசோக் குமார், பொ.போஸ் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment