சூரியனின் செயல்பாடுகளில் மாற்றங்கள்: அறிவியலாளர்கள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

சூரியனின் செயல்பாடுகளில் மாற்றங்கள்: அறிவியலாளர்கள் தகவல்

சூரியனை பற்றி 10 ஆயிரம் ஆண்டு கள் பின்னோக்கி சென்று, அதன் செயல்பாடுகளை கண்டறிந்து இந்திய அறிவியலாளர்கள் தனித்துவ தகவல் களை வெளியிட்டு உள்ளனர்.

சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள் ளும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதே போன்று, அய்ரோப் பாவும் சூரியனைப் பற்றி அறியும் முயற்சியில் இறங்கியுள் ளது. இதற்காக நாசா அமைப்பு, பார்க்கர் சோலார் புரோப் என்ற பெயரிலும், அய்ரோப்பிய அமைப்பு சோலார் ஆர் பிட்டர் என்ற பெயரிலும் திட்டங்களை செயல்படுத்தி, விண்வெளி வானிலை உள்ளிட்டவைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. இந்தியாவும், சூரியனைப் பற்றி விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு, அதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்த திட்ட செயல்பாடு நடை முறைப்படுத்த முடிவாகி உள்ளது. இதன் நோக்கம், சூரியனின் மேற்பரப்பு, சூரியப் புயல், சூரிய வெடிப்பு, பிளாஸ்மா வெளி யேற்றம் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்யப்படும். இந்த ஆண்டில் சூரிய சுழற்சி, அதிக தீவிர செயல்பாட்டுடன் உச்சமடைந்து காணப்படுகிறது. அதிலும், கடந்த வாரம் 3 சூரிய வெடிப்புகள், 18 பெரிய அளவிலான பிளாஸ்மா வெளி யேற்றம் மற்றும் ஒரு புவிகாந்தப்புயல் ஆகியவை ஏற்பட்டு உள்ளன.

ஆனால், இதற்கு முன்பு ஒரு போதும் இந்த அளவுக்கு ஏற்பட்டது இல்லை.

No comments:

Post a Comment