ரயில்களில் முதியோர் கட்டண சலுகை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைப்படி உடனடியாக வழங்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

ரயில்களில் முதியோர் கட்டண சலுகை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைப்படி உடனடியாக வழங்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தல்

  

மதுரை, அக்.17 ரயில்களில் முதியோர்களுக்கான பயணக் கட்டண சலுகையை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் படி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கரோனா காலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த முதியவர்கள் பயணத்தை தவிர்ப்பதற்காக பயணக்  கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. தற்போது, 200 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போடப்பட்டு, நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, முதியோருக்கான கட்டண சலுகையை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கட்டணச் சலுகை வழங்குவது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சகம் கூறி வருகிறது. நிலைக்குழு பரிந்துரை நாட்டில் உள்ள 14 கோடியே 43 லட்சம் முதியோர்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பு உள்ளது. மீதமுள்ள 88 சதவீதம் பேர் தங்களது பிள்ளைகளை நம்பி வாழ்கின்றனர். மருத்துவ சிகிச்சை, மற்றும் பல காரணங்களுக்காக முதியோர்கள் ரயில்களில் செல்கின்றனர். அவர் களுக்கான கட்டணச் சலுகையை மறுப்பது அநீதியாகும். ஒரு சில நாடுகளில் முதியோர்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஆகஸ்டு மாதம் 4-ஆம் தேதி பா.ஜ.க.வின் உதவித் தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 12ஆ-வது அறிக் கையில் 14-ஆவது பரிந்துரையில், முதியோர் கட்டண சலுகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என பரிந்துரைப்பதாக தெரிவித்து உள்ளது. 

எனவே, முதியோர்களுக்கு உட னடியாக சலுகை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment