ஹிந்தி திணிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

ஹிந்தி திணிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு தீர்மானம்

சென்னை,அக்.17- இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இந்தி, சம்ஸ்கிருத திணிப் புக்கு வகை செய்யும் முறையில் உரு வாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள் கையின் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் அனைத் தும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. குடியரசுத் தலைவரிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 112 பரிந்துரைகளை வழங் கியுள்ளது. இதில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்தியை திணிக்கும் முயற்சியாகவே உள்ளது.

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் நாடு மட்டுமின்றி, கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா, கருநாடகாவிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாஜகவின் ஒற்றை மொழி திணிப்பை இந்தியாஏற்காது என்பதையே இது காட்டுகிறது. அனைத்து படிப்பு களுக்கும் பொது நுழைவுத் தேர்வை புகுத்துவது அப்பட்டமான அநீதி. 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசுப் பணியாளர் தேர் வாணையம் (ஷிஷிசி) அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான கேள்வித் தாள்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது, இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி.ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறோம்.

நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், அரசி யல் சாசனத்தின் 8ஆவது அட்டவணை யில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய தேர்வாணைய வினாத் தாளில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும். ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் போராட முன்வர வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


No comments:

Post a Comment