பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது நிதிஷ்குமார் திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது நிதிஷ்குமார் திட்டவட்டம்

பாட்னா,அக்.17- "தன் வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜக வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்" என்று பீகார் முதலமைச்சரும், அய்க்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக நாட்டில் மோதலை உருவாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ரூ.75 கோடியில் கட்டப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் 14.10.2022 அன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்," பாஜகவினர் தொடர்ந்து அபத்தமாக பேசி வருகின்றனர். நான் முன்பு மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் (2017இல்) இணைந்தேன். இப் போது மீண்டும் பழைய கூட்டணிக்கு திரும்பிவிட்டேன். எங்ளுக்குள் விரக்தி ஏற்பட்டு மோதல் உருவாக வேண் டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்காக பாஜகவினர் என்னை அதிகம் தாக்கிப் பேசி வருகிறார்கள்.

பாஜகவினர் நாட்டில் மோதலை உருவாக்க முயற்சிக் கிறார்கள். அதனால் நாட்டின் வளச்சிக்கு எந்தப்பயனும் இல்லை. என் வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். சமாஜ்வாதிகளுடன் (சோஷலிட்ஸ்களுன்) இணைந்து, பீகார் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்றப்போகிறேன்.

கடந்த 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமரான போது ஒன்றிய அமைச்சரவைக்கு என்னையும் தேர்ந் தெடுத்து எனக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார் என்பதை பாஜகவினர் மறந்துவிட்டனர். தற்பொழுது ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை" என்று நிதிஷ்குமார் பேசினார்.


No comments:

Post a Comment