புதுடில்லி, அக்.17- கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரில் பாரம்பரிய மருத்துவராக இருப்பவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா. இவர்களுக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷிகாப் என்ற முகம்மது ஷபி முகநூல் மூலம் அறிமுகமானார்.
அவர், வாழ்வில் சகல அய்ஸ்வர்யங்களும் பெருகும் எனக் கூறி, பகவல் சிங்கின் வீட்டுக்கு 2 பெண்களை அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பகவல் சிங், லைலா, ஷபி ஆகிய முவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப் படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப் பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 2 பெண் களின் வாழ்வுரிமை மீறப்பட்டுள்ளது. குடிமக்களின் பாது காப்புக்கு மாநில அரசுதான் பொறுப்பு. இதுபோன்ற மோசமான செயல்களிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
எனவே, இந்த விவகாரத்தில் கேரள அரசின் தலைமைச் செயலாளரும் காவல்துறை தலைவரும் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தவழக்கு விசாரணையின் நிலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment