காஞ்சி, அக். 12- காஞ்சி மண் டல, தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கக் கலந்துரையாடல் கூட்டம் 2.10.2022 அன்று காலை 11.00 மணியளவில், காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள ராஜ்பவன் சத்திரத்தில், மாநில பொதுச் செயலாளர் மு. சேகர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை சிவா, கூடு வாஞ்சேரி ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்ட திரா விடர் கழக இணைச்செய லாளர் அ. வெ. முரளி அனைவரையும் வர வேற்று கூட்டத்தை ஒருங் கிணைத்து நடத்தினார்.
சங்கத்தின் தேவை குறித்தும் தமிழர் தலைவ ரின் வழிநடத்தல் குறித் தும் பொதுச் செயலாளர் மு.சேகர் உரையாற்றி னார். நிகழ்வில் பங்கேற்ற அனைத்துத் தோழர்க ளும் தங்கள் கருத்துக் களை எடுத்துக் கூறினர். அனைவரின் அய்யங்க ளுக்கும் மு. சேகர் விளக் கம் தந்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
1. காஞ்சி மண்டலத் தில் உள்ள காஞ்சிபுரம், செங்கற்பட்டு, இராணிப் பேட்டை, திருவள்ளூர் ஆகிய வருவாய் மாவட் டங்களில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் தனித்தனியாகத் தொடங் குவது என்று தீர்மானிக் கப்பட்டது.
2 அமைப்புச் செயலா ளர் - முனைவர் பா. கதிர வன், தலைவர் - அ.வெ. முரளி, செயலாளர் - ச. வேலாயுதம், பொருளா ளர் - கி. இளையவேள், துணைத் தலைவர் - ஆ. மோகன், துணைச் செய லாளர் - வீ. கோவிந்தராஜ், ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
3. அமைப்புச் செயலா ளர் - கோ. கிருஷ்ண மூர்த்தி, தலைவர் - ஜி. விஜயகுமார், செயலாளர் - க.ஏ. தமிழ் முரசு, பொருளாளர் - த. ரமேஷ் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளா கத் தேர்ந் தெடுக்கப்பட் டனர்.
4. அமைப்புச் செயலா ளர் - பு. எல்லப்பன், தலை வர் -ஏ. ஞானப்பிரகாசம், செயலாளர் - ரமேஷ், பொருளாளர் - ஜி. ஆறு முகம், துணைத் தலைவர் - சு. லோகநாதன், துணைச் செயலாளர் - செ. கோபி ஆகியோர் இராணிப் பேட்டை மாவட்ட நிர்வாகிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
5. இச்சங்கத்தின் உறுப்பினர்களை நலவாரியத்தில் சேர்த்து, அவர்களுக்கான அரசு உதவிகளைப் பெற்றுத் தருவது என்று தீர்மானிக் கப்பட்டது.
6. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90வது பிறந்தநாளை (டிசம்பர் 2) வெகுசிறப்பாக அனைத்து மாவட்டங்க ளிலும், அனைத்து உறுப் பினர்களும் பங்கேற்று கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
முனைவர் பா. கதிர வன், கி. இளையவேள், ஆ. மோகன், வீ. கோவிந் தராஜ், சு. லோகநாதன், ஏ. ஞானப்பிரகாசம், கோ. கிருஷ்ண மூர்த்தி, த. ரமேஷ், அறிவு வளர்ச்சி மன்ற அமைப்பாளர் நாத்திகம் நாகராசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துரையாடல் கூட் டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித் தனர்.
செயலாளர் ச. வேலா யுதம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment