கிருட்டிணகிரி, அக். 27- 21.-10.-2022 அன்று காலை 10 மணி அளவில் கிருட்டின கிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் சங்கமித்ரா இசை நுண்கலை மய்யம் என்ற பெயரில் ஆர்.எஸ். எஸ். சார்பில் "தேசியமும் தெய் வீகமும் "என்ற தலைப்பில் நடை பெறுவதாக இருந்த கருத்தரங்கத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருட்டி னகிரி மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், தலைமையில் நகர தலைவர் கோ. தங்கராசன், ஒன்றிய தலைவர் த. மாது, விடுதலை சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் மு.அருண், அர்ஜுனன் ஆகியோர் சென்று கலை கல்லூரி முதல்வர் கோ. கண்ணனிடம் கருத்தரங் கத்தை கண்டித்து மனு அளிக்கப் பட்டது.
மேலும் கல்லூரி முதல்வரிடம் மதச்சார்பற்ற நாட்டில், அரசு கல்லூரியில் இதுபோன்ற நிகழ்ச்சி களுக்கு எப்படி அனுமதி அளித் தீர்கள் என்று கேட்டதற்கு கல்லூரி முதல்வர் தமிழ் துறை சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா, இலக்கிய நிகழ்ச்சி நடத்துவதா கவும், அதற்கு அனுமதி வேண்டும் என தமிழ்த்துறை பேராசிரியர் கேட்டதால் அதற்கு அனுமதி அளித்ததாகவும் கூறினார்.
மேலும். தமிழ் துறை பேராசிரி யரிடம் கேட்டபோது நீங்கள் எப் படி சுதந்திர தினம் கொண்டாடு வதாக முதல்வரிடம் அனுமதி கேட்டுவிட்டு இது போன்ற நிகழ்ச்சி எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு , சங்கமித்ரா இசை நுண்கலை மய்ய பொறுப் பாளர்கள் எங்களிடம் பல கல்லூ ரிகளில் இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் தங்கள் கல்லூரியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதால், இது தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பயனுள்ள இலக் கிய நிகழ்ச்சி என்று நினைத்து ஏற்பாடு செய்ததாகவும், தனக்கு அழைப்பிதழை பார்த்த பின்புதான் இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்துவது என்று தெரிந்ததாகவும், அதன்பின் முதல்வரிடம் பேசி கருத்தரங்கம் நிறுத்தப்பட்டதாக வும் கூறினார்.

No comments:
Post a Comment