செய்தியும் சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

செய்தியும் சிந்தனையும்....!

கூவிப் பயன் என்ன?

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி.

- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

>> ஆண்டுதோறும் கூவியும் காரியத்தில் நடக்க வில்லையே!

விசாரணையின் அடுத்த கட்டம்

ஆறுமுகசாமி அறிக்கையை பி.ஜே.பி. ஏற்காது.

- பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>> அப்படியென்றால் அண்ணாமலையையும் சேர்த்து விசாரிக்கவேண்டும்.

பரிதாபப் பக்தர்கள்!

சூரிய கிரகணம் வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 11 மணிநேரம் மூடப்படுகிறது.

>> சக்தி சூரியனுக்கா, ஏழுமலையானுக்கா? அந்தோ பரிதாபப் பக்தர்கள்!

தாராளம்தான்

தமிழ்நாட்டுக்கு 529 டி.எம்.சி. நீரை கருநாடகம் வழங்கியுள்ளது.

>> கடுமழை பொழிகிறது அல்லவா! அதனால் அவர்கள் உள்ளமும் தாராள மனப்பான்மையில் குளிக்கிறது.

No comments:

Post a Comment