மதுரையில் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை? கைவிரித்துவிட்டதா ஒன்றிய அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

மதுரையில் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை? கைவிரித்துவிட்டதா ஒன்றிய அரசு!

மதுரை, அக். 23- மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது என்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆர்.டி.அய்.யில் அதிர்ச்சித் தகவலை தெவித் துள்ளது. 

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்று பிப்ரவரி 2015 இல் அறிவித்து 7 ஆண் டுகள் ஆகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறை வடைந்து விட்டன. இன்னும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப் படவில்லை . இந்நி லையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து ஆர்.டி.அய்.யில் (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) தென்காசி யைச் சேர்ந்த சமூக ஆர்வ லர் பாண் டியராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2026 இல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் முடியும். கட்டுமானப் பணிகள் எப் போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை . மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைகா நிறுவனம் வழங்கும். 20 சதவீத தொகையான ரூ.350.1 கோடியை ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் உள்பட முத லீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதற் காக ரூ.12.35 கோடி தொகை விடு விக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, 

"தமிழ்நாட்டுக்குப்பின் அறிவிக் கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கள் எல்லாம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு திறப்பு விழா கண்டு வருகின்றன. ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே காரணங்கள் கூறப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது திட்ட மேலாண்மை நிறுவ னத்தை இறுதி செய்தல், வரைபடம் தயாரித்தல், கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்தல் என இன்னும் எத் தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பதே தெரியவில்லை. இது மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது . மேலும் காலதாமதம் செய்யாமல் மதுரை எய்ம்ஸ் கட்டு மானப் பணிகளைத் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment