உடல் நலம் காட்டும் உடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

உடல் நலம் காட்டும் உடை

ஒருவர் எங்கிருந்தாலும், அவரது உடல் நிலையை கண்காணிப்பதற்கான தொழில் நுட்பங்கள் வரத்தொடங்கிவிட்டன. அதில் ஒன்று தான், அணியும் உடை களையே உடல்நலம் அறிய உதவும் கருவிகளாக மாற்றும் நுட்பம்.

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி யின் ஆராய்ச்சியாளர்கள், 'பெக்கோ டெக்ஸ்' என்ற ஒரு துணி வகையை உருவாக்கியுள்ளனர். இந்த துணி முழுவதும் பருத்தி இழைகளால் ஆனது என்றாலும், இதன் ஊடுபாவாக, 10 வகை மின்னணு உணரிகளை வைத்து நெய்யப்பட்டது.

இதனால், ஒருவரது உடல் நிலை குறித்த 10 வகை அறிகுறிகளை தொடர்ந்து கண்காணித்து அறிய முடியும். இந்த உணரிகள் தரும் தகவல்களை மொபைல் செயலி மூலம் சேகரித்து அறியலாம்.

பெக்கோடெக்சை வைத்து தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தை அணிந்த வரின் சுவாசத்தை அலசி உடல் நிலையை அறியலாம்.

பெக்கோடெக்சால் ஆன டி-ஷர்டில் சில உணரிகளை மாற்றி வைப்பதன் மூலம் இதயத்துடிப்பு முதல் பலவகை அறிகுறிகளை அலச முடியும்.

No comments:

Post a Comment