சிறுவர்களுக்காக நிதி திரட்டிய மோட்டார் சைக்கிள் பந்தய வீரார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

சிறுவர்களுக்காக நிதி திரட்டிய மோட்டார் சைக்கிள் பந்தய வீரார்கள்

The Riders Aid Singapore எனும் அமைப்பைச் சேர்ந்த 800 மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் கொண்ட இவர்கள், சிங்கப்பூர் சிறார் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினர். அதன் வழி 32,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கபூர் துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

சிங்கப்பூர் மனிதாபிமான உணர்வை வெளிக்கொண்டு வரும் இத்தகைய முயற்சியில் இணைந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அவர் தமது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்தார். சமூகத்துக்குத் திரும்பக்கொடுக்க வேண்டும் என்ற இத்தகைய உணர்வு மேலோங்கிவிட்டால் சவால்கள் அனைத்தையும் வாய்ப்புகளாக்கிவிடலாம் என்றார் திரு வோங்.

மோட்டார்சைக்கிள்களின் கம்பீர அணியில் தொண்டூழி யர்களும் மலேசியாவைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.

No comments:

Post a Comment