மோடி நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களிடம் நடத்தை சான்றிதழ் கேட்ட பா.ஜ.க. அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

மோடி நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களிடம் நடத்தை சான்றிதழ் கேட்ட பா.ஜ.க. அரசு!

சிம்லா, அக்.7 - பிரதமர் நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்கள், நற் பண்புச் சரிபார்ப்பு சான்றிதழ்களை (Character Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்று இமாச்சல் பிர தேச பாஜக அரசின் காவல்துறை யானது, சுற்றறிக்கை அனுப்பிய நிகழ்வு நடந்துள்ளது. 

பிரதமர் மோடி, அக்டோபர் 5-ஆம் தேதி  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம்  மேற்கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக மோடியின் இந்த சுற்றுப் பயணத்தை யொட்டி, பிலாஸ்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், அனைத்து பத்திரிகை செய்தியாளர்கள்,  மற்றும்  ஒளிப் படக் கலைஞர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. செப்டம்பர் 29- தேதியிட்ட அந்த முதல் கடிதத்தில் “பிரதமர் மோடி யின் நிகழ்ச்சிக்கு வரும் ஊடகவிய லாளர்கள், அவர்களின் நற்பண்பு சரிபார்ப்பு சான்றிதழை அக்டோ பர் 1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச் சியில் அவர்களை அனுமதிப்பது இந்தச் சான்றிதழை வைத்துதான் தீர்மா னிக்கப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தனர். அரசாங்கத்தால் நடத்தப்படும் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும்  பத்திரிகையாளர்களும் கூட இந்த உத்தரவிலிருந்து தப்பவில்லை.

காங்கிரஸ் கண்டனம்

இமாச்சலப் பிரதேச பாஜக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கிறது என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்தன. இந்த விவகாரம் தேசிய அளவிலும் விவாதமாக மாறியது. 

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இமாச்சலப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை “கவனக் குறைவாக வழங்கப்பட்ட அந்தக் கடிதம் வருத்தம் அளிக்கிறது; அது திரும்பப் பெறப்படுகிறது” என்று கூறியதுடன், “நிகழ்வுக்கு அனைத்து ஊடகங்களும் ‘வரவேற் கப்படுகின்றன’ என்றும் அவற்றின் கவரேஜ் எளிதாக்கப்படும்; அரசாங் கத்தின் ஊடகப் பிரிவினால் பரிந் துரைக்கப்படும் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்” என புதிய அறிவிப்பை வெளியிட்டது. 

இமாச்சல் காவல்துறை தலைவர் சஞ்சய் குண்டுவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார்.  “5.10.2022 அன்று  மாண்புமிகு பிரதமரின் இமாச்சலப் பிரதேச  பயணத்தை செய்தியாக்க அனைத்து பத்திரிகை யாளர்களும் மிகவும் வரவேற்கப் படுகிறார்கள். ஏதேனும் அசவு கரியம் ஏற்பட்டால் வருந்துகிறேன்" என்று அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு ஊடகவியலாளர்களை சமாதானப் படுத்தினார்.

No comments:

Post a Comment