ஆன்மிகத்தின் பெயரால் நெசவாளர்கள் கத்தியால் வெட்டிக் கொள்வதா? தேசிய கைத்தறி பயிற்சியாளர் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

ஆன்மிகத்தின் பெயரால் நெசவாளர்கள் கத்தியால் வெட்டிக் கொள்வதா? தேசிய கைத்தறி பயிற்சியாளர் விமர்சனம்

கோவை, அக்.7- ஆன்மிகத்துக்கும், நெசவாளர் களுக்கும் தொடர்பு இல்லை என கத்தி போடும் விழா குறித்து தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் கூறியுள்ளார். கத்தி போடும் திருவிழா குறித்து கோவை சிறுமுகையைச் சேர்ந்த தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் கூறியதாவது:

கத்தி போடும் விழாவில் பங்கேற்பதால் நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வாறு உயரும். குருதி சொட்ட கத்தியால் கையில் வெட்டிக் கொள்கின்றனர். இதனால் மறுநாள் அவர்கள் சென்று தறி ஓட்ட முடியுமா? கையில் வெட்டியதால் காயம் ஏற்பட்டு, அவர்கள் சில நாட்கள் பணி செய்ய முடியாது. இதுபோன்றவற்றை தவிர்த்து, வருமானத்தை ஈட்டவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் துறைசார்ந்த விழாவாக நடத்தலாம். பாரம்பரியம் என்பது முடிந்து போன விஷயம். தொழில் ரீதியான கலாச்சாரம், பகுத்தறிவு சிந்தனையோடு இருந்தால் தான் எந்தத் துறையும் வளரும். கத்தி போடும் நிகழ்வு நடத்தக்கூடாது என்பது என் கருத்து. ஆன்மிகத்துக்கும், நெசவாளர் களுக்கும் தொடர்பே இல்லை. எனவே, இதுபோன்ற நாட்களில் தொழில் ரீதியிலான நிகழ்வுகளை நடத்தலாம்’’ என்றார்.


No comments:

Post a Comment