சிறீநகர், அக். 7 - தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தாக ஜம்மு - காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜன நாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள் ளார்.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார். அவர் 4.10.2022 ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற் றார். சுற்றுப்பயணத்தின் 2ஆம் நாளான 5.10.2022 அன்று ஜம்மு_-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத் துவதாகவும், மாலையில் பார முல்லா மாவட்டத்தில் நடை பெறும் பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அமித்ஷா சுற்றுப்பயணத்தின் பின்னணி யில், தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மெக பூபா முப்தி குற்றம் சாட்டி யுள்ளார்.
“அமைதி நிலை திரும்பி விட்டது என உள்துறை அமைச் சர் தம்பட்டம் அடித்துவரும் நிலையில் பத்தன் பகுதியிலுள்ள எனது கட்சி தொண்டரின் இல்ல திருமண நிகழ்வுக்கு செல்ல இருந்த நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். மேனாள் முதலமைச்சரின் அடிப்படை உரிமை சுலபமாக ரத்து செய்யப்படும்போது, சாமானியர்களின் அவல நிலையை நினைத்துப்பார்க்க முடியவில்லை’ என மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment