அறந்தாங்கி மாவட்ட கழகக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

அறந்தாங்கி மாவட்ட கழகக் கலந்துரையாடல்

அறந்தாங்கி, அக். 27- அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 21-.10.-2022 வெள்ளி மாலை 5.30மணியளவில் கீரமங்கலம் விநாயகா ஓட்டலில்  நடைபெற்றது. 

தலைமை வகித்த  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், முன்னிலை வகித்த மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் 'விடுதலை' சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராமப் பிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா , தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய 'ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை' நூல் அறிமுக கூட்டங்களை பொது வெளியில்  நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும், 

அறந்தாங்கி கழக மாவட் டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட (3) சட்டமன்ற தொகுதிகளில் ஆத ரவாளர்கள் தோழமை இயக்கத் தினர் சட்டமன்ற மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் என அனை வரையும் சந்தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ் வது எனவும்  டிசம்பர்-2 சென் னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன்  பங்கேற்று சிறப் பிப்பது என முடிவு செய்யப்படு கிறது.

மாவட்டத் தலைவர் க.மாரி முத்து, மாவட்டசெயலாளர் கறம் பக்குடி முத்து* மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் ச.குமார், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர் ராசன், மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரைய்யா தஞ்சை மண்டல இளைஞரணி செயலா ளர் முனைவர் வே.இராஜவேல், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் சந்திரகுமார், ந. அம்பிகாபதி, தேவேந்திரன், ரெ.மணிமாறன், மன்னை அலெக்சாண்டர், உள் ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டு  கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை செயல்படுத்தி உழைப்போம் என உற்சாகமாக உரையாற்றினர்.

கொத்தமங்கலம் கிளைக்கழகத் தலைவர் கார்மேகம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் மெய்யநாதன் வழங் கிய 'விடுதலை' சந்தாவுக்கான முகவரி பட்டியலையும் 2 விடுதலை சந்தா வையும் வழங்கினர். 

No comments:

Post a Comment