தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் தொடங்கியது மறைவுற்ற தலைவர்கள் - ராணி எலிசபெத், கோடியேரி பாலகிருஷ்ணன், முலாயம் சிங், சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் தொடங்கியது மறைவுற்ற தலைவர்கள் - ராணி எலிசபெத், கோடியேரி பாலகிருஷ்ணன், முலாயம் சிங், சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல்

சென்னை, அக்.17 தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (17.10.2022) காலை 10 மணிக்கு தொடங்கியதும் மறைவுற்ற சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் எலிச பெத் ராணி, கொடியேரி பாலகிருஷ்ணன், முலாயம்சிங், சேடப்பட்டி முத்தையா உள் ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடிய வுடன் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் எழுந்து நின்று சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர்களான அ.மு.அமீது இப்ராகிம், கே.கே. வீரப்பன், ஏ.எம். இராஜா, எஸ்.பி. பச்சையப்பன், எஸ். புருஷோத்தமன், பெ.சு. திருவேங்கடம், தே. ஜனார்த்தனன், பே. தர்மலிங்கம், எம்.ஏ. ஹக்கீம், கோவை தங்கம்  ஆகியோர் மறைவுற்ற செய்தியினை பேரவைக்கு வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட உறுப்பினர்கள் இச்சட்டப் பேரவையில் சிறப்பாக பணியாற்றினார்கள் என்றார்.

ராணி எலிசபெத் - முலாயம் சிங்

அதே போன்று இராமநாதபரம் இளைய மன்னர் இராஜா திரு. நாகேந்திரகுமரன் சேதுபதி, இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், அய்க்கிய இராஜ்ஜியத்தின் (United Kingdom)  ராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸின் மேனாள் தலைவர் துன் திரு. எஸ். சாமிவேலு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் திரு. முலாயம்சிங், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மேனாள் தலைவர் திரு. சேடபட்டி இரா. முத்தையா ஆகியோர் மறைவுற்ற செய்தியை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இப்பேரவை  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் பேரவைத் தலைவர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பெரு மக்கள் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று  அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பேரவையின் இன்றைய நிகழ்வு முடிவுற்றது.

புறக்கணிப்பு

சட்டமன்றப் பேரவையின் இன்றைய நிகழ்வில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டி யன், அய்யப்பன் ஆகியோர்  பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரை சார்ந்த உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 


No comments:

Post a Comment